கௌரவ மாகாண ஆளுநர் அவர்களது செய்தி.

 வடமேல் மாகாண தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மூலம் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய போக்குவரத்து தகவல் அமைப்பு மற்றும் பணி இணையத்தளம் பற்றிய செய்தியினை வெளியிடுவதற்கு ஏற்பட்டது பற்றி நான் மகிழ்ச்சியடைகன்றேன்.

 ஆசிய வலயத்தில் தகவல் தொழில்நுட்பம் மிகவூம் வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளதுடன்இ இக் காலத்தினுள் தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய இலங்கையர்களும் தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து உருவாகியூள்ளனர். என்றாலும் தயாரிப்புகளின் நோக்கங்கள் நடைமுறைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பொது மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டியதுடன்இ வடமேல் தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இத் திட்டம் அத்தகைய ஒரு பரோபகார திட்டமாக இருக்கும்.

 இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி அறிவூ ஆசிய வலயத்தினுள் வேகமாக வளர்ந்துள்ளதுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது திருப்திகரமானதாக இல்லை. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் இறுதி முடிவூ மக்களின் நலனுக்காக இருக்க வேண்டியதுடன்இ அது வெறுமனே மேலதிக நேரம் அல்லது செலவிற்கான விடயமாக அமையலாகாது. தற்போதைய உலக பொருளாதாரத்தில் மிகவூம் பெறுமதியினை உடைய முதலீடாகவூம் இருப்பதனால் இத் தொழில்நுட்ப பயன்பாடுகள் நேர முகாமைத்துவத்திற்கு மிகவூம் முக்கியமானதாக இருக்கும்.

 உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டு இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கான இலக்கினை அடைய வடமேல் மாகாண மக்கள் இத் தகவல் தொழில்நுட்ப கருவியினை அதிகளவில் பயன்படுத்துவதற்கு இயலுமாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.